லப்பபேட்டையில் மாற்று கிராமத்தைச் சேர்ந்த தனிநபருக்கு பொது இடத்தில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை !!

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அடுத்த லப்பப்பேட்டை கிராமத்தில், மண்பாண்டத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில், பொது இடத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அத்துமீறிப் பட்டா பெற்றதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.இந்த விவகாரம் குறித்து லப்பப்பேட்டை கிராமத்தின் விஏஓ, இரு தரப்பினரிடமும் நேரில் விசாரணை நடத்தினார். 

மண்பாண்டத் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமும்,சுப்பிரமணியத்திடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்த விசாரணை அறிக்கையை விஏஓ, துறைசார்ந்த மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சுப்பிரமணிக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்வதா? அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுப்பதா? என்பது குறித்து மேலதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி முடிவெடுப்பார்கள்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!