உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான அவமதிப்பை கண்டித்து அரக்கோணம் வழக்கறிஞர்கள் சாலை மறியல்!!
உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான அவமதிப்பை கண்டித்து அரக்கோணம் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் அந்த வரிசையில்
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர். அமல்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் நீதியரசருக்கு பாதுகாப்பு தர கோரியும்
வழக்கறிஞர். ராகேஷ் கிஷோர் மீது உச்ச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியும் பார் அசோஸியேஷன் சார்பில் அதன் தலைவர். வீரராகவன் தலைமையில் செயலாளர். தமிழ்மாறன் பொருளாளர். பத்பநாபன் முன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில். நிர்வாகிகள் துணைத் தலைவர் பாபு, துணைச் செயலாளர். சீதாராமன், நூலகர் மதன் மற்றும் தணிக்கையாளர்.
எம்.தமீன்அன்சாரி உட்பட மூத்த வழக்கறிஞர்கள். கண்ணையன், திருவேங்கடம், லோகாபிராமன்,ஆர். ரவி, பாலதிருவேங்கடம், உள்ளிட்ட மகளிர் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக