ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள் மிகு ஸ்ரீ கதலி நரசிங்கப்பெருமாள் செங்கமலத்தாயார் புரட்டாசி திருவிழா!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்லிப்புத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கதலி நரசங்க ப்பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது .இக்கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்திலேயே திருப்பணிகள் தொடங்கப்பட்டு திருமலை நாயக்கர் காலத்தில் பல மண்டபங்கள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது .இங்கு ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருடன் நரசிங்க பெருமாள் மூலவராகவும் செங்க மல தாயாருக்கு தனி சன்னதியும் உள்ளது.நரசிங்கப்பெருமாள் வாழைப்பூ வடிவில் சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கிறார் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது.. நின்ற கோலத்தில் குட்டி கிருஷ்ணர், ஆழ்வார்கள்,முன்னால் பார்த்தால் சக்கரத்தாழ்வார் ,பின்னால் பார்த்தால் யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், பைரவர் ,கருட பகவான் மற்றும் நவகிரகங்களும் இக்கோயிலில் அருளப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த அரச மர விநாயகரும் இரண்டு புறங்களிலும் அமைந்து உள்ளது. மேலும் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடன்களாக செலுத்தும் வகையாக அன்னதானமும் வழங்கி சிறப்பித்தனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!