ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி நிறைவு நாள் கன்னி பூஜை!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம். நேருஜி நகர், 7-வது தெருவில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு புரட்டாசி மாதம்  ஒன்பது நாள் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது நூற்றுக்கணகான கொளு பொம்மைகள் வைப்பதும் பிரசாதங்கள் தினமும் வழங்கபட்டு வந்தன  முதல் நாள்  விழாவில் சிம்மவாகனத்தில் பார்வதி அம்மாள் அருள் பாலித்தார்.


இதே போல்  ஒன்பது நாளும் ஒவ்வொரு அம்மன் காட்சியளித்து வந்தார் நிறைவு தினமான அக் 1 ந்தேதி சாஸ்வதி அம்மாள காட்சி அளித்தார். அன்றைய நிறைவு தினத்தில்  இரவு கன்னி பூஜை மகளிரணி தலைவரும் நகரமன்ற உறுப்பினருமான சாமுண்டீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் லட்சுமி அவர்கள்கலந்து கொண்டார். இதில் 9 சிறு குழந்தைகள் அலங்காரத்துடன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கன்னி பூஜை நடத்தபட்டது. இதற்கான ஏற்பாடுகளில் ஆன்மீக வாதிகள் வடிவேலு, செந்தில் குடும்பத்தார் விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!