தூய நீர், தூய காற்று, தூய மண் இதுவே எங்கள் கோட்பாடு!!
தேனி மாவட்டம், கம்பம் நகரில் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர். ஜெகநாத் மிஸ்ரா முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று விழா நடக்கும் தனியார் திருமண மண்டபத்திற்கு வருகை புரிந்தனர். கம்பம் நகரில் மாற்று கட்சிகளிலிருந்து விலகிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா கட்சிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளோடு கூட்டணி வைப்போம் என்றும் தூய நீர், தூய காற்று, தூய மண் இது தான் மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய கோட்பாடு மக்களுக்கான சேவையை முக்கியம் என்று கூறினார்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக