மேல்வெண்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் ! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், ஜாகீர்தண்டலம் ஊராட்சி - மேல்வெண்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்”திட்ட முகாம் நடைபெற்றது.முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர். சிவக்குமார் தலைமை தாங்கினார், ஜாகீர்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர். கன்னியம்மாள் பழநி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் ஜாகீர்தண்டலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், நெமிலி வடக்கு ஒன்றிய செயலாளர். மணிவண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர். இரவீந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர்.SGC. பெருமாள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர். தீபா திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் ஏழுமலை, கண்ணாயிரம், சம்பத், சங்கர், முருகன், புருஷோத்தமன், தணிகைவேல் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்
கருத்துரையிடுக