நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) பூத் டிஜிட்டல் ஏஜென்ட் (BDA) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!!

ராணிப்பேட்டைமாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு இராணிப் பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படி, நெமிலி கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA-2) மற்றும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட் (BDA) நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, நெமிலி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பேசியதாவது “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றிட தமிழ்நாட்டு மக்கள் ஓர் அணியில் திரள வேண்டுமென்ற, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பில், நெமிலி கிழக்கு ஒன்றியத்தில் 52% உறுப்பினர்களை சேர்க்க, அயராது உழைத்தமைக்காகவும்,

மேலும், அவ்வாறு இணைந்த பொதுமக்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு பூத் வாரியாக, “உறுதிமொழி ஏற்பு முன்மொழிவு கூட்டங்கள்” நடத்தப்பட வேண்டுமென தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அந்தக் கூட்டங்களையும் ஒவ்வொரு பூத் வாரியாக கழக உடன்பிறப்புகள் சிறப்பாக நடத்தியமைக்கும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். 

மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சிறப்பாக செயல்பட்டு நம்முடைய ஒன்றியத்தில் கழகத்திற்கு அதிகப்படியான வாக்குகள் பெற்றுத்தர, கிளைக் கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் அயராது பாடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், வாக்குச்சாவடி முகவர்களும், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் நிர்வாகிகள், கழகத்தின் சார்பு அணிகளின் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகிட வேண்டுமென்றும் எவ்வாறெல்லாம் கழகப் பணியாற்ற வேண்டுமென்றும், சமூக வளைதளங்களின் வாயிலாக கழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்கின்ற மகத்தான பணியை, திறம்பட மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தலைமை செயற்குழு உறுப்பினர், வழக்கறிஞர்.கண்ணையன் அவர்கள் பேசுகையில், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கழகத்திற்கு வலு சேர்க்கும் விதமாகவும், கழகத் தலைவரின் கரங்களை வலுப்படுத்தும் விதமாகவும்,  நெமிலி கிழக்கு ஒன்றியத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகள் பெற்றுத் தரும்படி, கழக நிர்வாகிகளையும், உடன் பிறப்புகளையும் கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். பிரகாஷ், அரக்கோணம் சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர். ராகுல், ராஜ்குமார், நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள். புருஷோத்தமன், அப்துல் ரகுமான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், விநாயகம், அரிகிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். அசோக்குமார், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!