தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணை!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.10.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 43 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  4 திருக்கோயில்களில் 4 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 48 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள், ஒரு இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர். (மின்), இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர். நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  மருத்துவர். க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர். பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர். பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!