புதுச்சேரி: ஐந்து நபர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு 60% மானியம் முதல்வர். ரங்கசாமி வழங்கினார்!!

புதுச்சேரி யூனியன் ஆட்சிப் பரப்பை சேர்ந்த 5 நபர்களுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் - ஆழ்கடல் மீன்பிடி படகுகள் 60% மானியத்தில் நிவாரணம் வழங்குதல் மற்றும் புதுச்சேரி பகுதி சேர்ந்த வெளிப்புறம் இயந்திரம் பொருத்திய பதிவு பெற்ற FRP படகுகளுக்கு டீசல் மானியம் முதன் முறையாக வழங்குதல்

“மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு” திட்டத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் ஆட்சிப் பரப்பை சேர்ந்த 5 நபர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு 60% மானியத்தில் நபர் ஒன்றுக்கு ரூ.72.00 லட்சம் வீதம், மீன்பிடி படகு கட்டுவதற்கான ஆணைகளையும், புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 3000 பைபர் மீன்பிடி படகுகளில் முதற்கட்டமாக வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் புதுவை மாநில மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள பெட்ரோல்/டீசல் பங்கில்  வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த பதிவு பெற்ற மற்றும் காப்பீடு செய்யப்பட்ட 120 வெளிப்புறம் இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு டீசல் மானியம் (விற்பனை வரி நீங்கலாக) வழங்குவதற்காண டீசல் மானிய புத்தகம் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர். ந. ரங்கசாமி அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று  வழங்கினார்.

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர். செல்வம். R, மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர். க. லட்சுமிநாராயணன், மீன்வளத்துறை இயக்குநர். A. முகமது இஸ்மாயில், இணை இயக்குநர். K. தெய்வசிகாமணி, துணை இயக்குநர் (இயந்திரப்பிரிவு) Dr.ப.கோவிந்தசாமி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியின் போது உடனிருந்தனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் செந்தமிழ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!