அரக்கோணம்:ரூ.5 லட்சம் மதிப்பு பாதுகாப்பு வளையம் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைப்பு!!

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர போக்குவரத்து காவல் துறை பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சம் மதிப்புடைய 30 எண்ணிக்கை கொண்ட பேரிகாட் (போக்குவரத்து தடுப்பு  வளையம்) வழங்கும் நிகழ்வு காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் தலைவர். பி. இளங்கோ தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர். மனோகர் முன்னிலை வகித்தார். செயலாளர். லட்சுமிபதி வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக  மாவட்ட துணை கண்காணிப்பாளர். ஜாபர் சித்திக் கலந்து கொண்டு பேரிகாட்களை

பெற்றுக் கொண்டார். ரோட்டரி சங்கத்தின் சார்பில் கௌரவ விருந்தினராக மாவட்ட தலைவர். விஜயகுமார் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் கே. பி. கே பிரபாகரன், மணிகண்டன், ஆர். வெங்கட்டரமணன் உட்பட போக்குவரத்து காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!