திருச்சி: அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் காட்டும் பணிகளுக்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா!!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை அரசு ஊரக சித்த மருத்துவமனை வளாகத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர். கே. என். நேரு அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர். வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர். எம்.பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர். கங்காதாரணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்.மா.வத்சலா மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.




கருத்துகள்
கருத்துரையிடுக