விழுப்புரம்: பயனியர் வாகனம் 3 பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர்.மா. மதிவேந்தன்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்களும் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர். இரா.இலட்சுமணன் அவர்களும் விழுப்புரம் சுற்றுலா மாளிகை வளாகத்தில், தாட்கோ மூலம் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு பயணியர் வாகனத்தினை வழங்கினார்கள்.
உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர். செ.புஷ்பராஜ், மாவட்ட வருவாய் அலுவலர். ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குஞ்டியினர் நல அலுவலர். வளர்மதி, தாட்கோ மாவட்டத்தில் மேலாளர். ரமேஷ் குமார், ஒன்றிய கழக செயலாளர். கிளியனூர் ராஜி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர். கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர். பரத், நகர இளைஞர் அணி அமைப்பாளர். செ.மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.



கருத்துகள்
கருத்துரையிடுக