காணாமல் போன சிறுவனை 24 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்!!
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தாலுகா, கோவிந்தசாமி நகரை சேர்ந்த வீரன் என்பவர் மகன் ஆறுமுகம் வயது 43 என்பவர் கஞ்சனூர் காவல் நிலையத்தில் ஆஜராகி தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகனை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ப.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். சரவணன் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர். மைக்கேல் இருதயராஜ்அவர்களின்தலைமையிலான போலீசார் பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அரியலூர் வரை சென்று சிறுவனை கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
24 மணி நேரத்தில் சிறுவனை கண்டுபிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக