அருட்பெருஞ்ஜோதி ராமலிங்க வள்ளலார் 203ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் விழா!!


பண்ணுருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின்சார்பில் திருவருட்பிரகாச வள்ளலார் 203ஆம் ஆண்டு வருவிக்கு உற்ற நாள் (பிறந்தநாள்) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சங்க கௌரவ தலைவர் தமிழ்ச்செம்மல் முனைவர்இரா. சஞ்சீவிராயர் அவர்கள் தலைமை தாங்கினார். சங்க செயல் தலைவர் மாநில நல்லாசிரியர் முனைவர் .ராஜா ஆ வரவேற்புரை ஆற்றினார்.சங்க ஆட்சி மன்ற குழு த தலைவர். இரத்தின. ஆறுமுகம்,சங்க ஆலோசகர் வை.வீரப்பன்,துணை தலைவர் இலந்தை சீனு. கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் ப.சாமிப் பிள்ளை

ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்,

வர்த்தக சங்க மண்டல தலைவர் திரு .டி .சண்முகம்,பெரியவர் ராமசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர். குரு அற்புத வேல் ராஜா,மகாலஷ்மி பாத்திரக்கடை உரிமையாளர். சுதாகர்,

திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்க காப்பாளர்கள், விவசாய தொழிலாளர் கட்சி, கட்டிட தொழிலாளர் மத்திய சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.சுப்பராயலு , பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ஏ.வீ.லோகநாதன்ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இவ்விழாவில் கோவிந்தசாமி,மருத்துவர்.எழரசன்,நகரமன்றஉறுப்பினர்கள்,ராமலிங்கம், பழனி,

அரசு ஒப்பந்ததாரர். ராஜா, திருஅதிகை சித்தர் பீடம் ஆனந்தன்,தமிழ்ச் செம்மல் கவிதை கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.வள்ளலாரின் சிறப்பான கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் நிறைவாக சங்க துணை செயலாளர் . சி.கோமேதகன் நன்றி கூறினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!