கடலூர்: ஆவணங்கள் இல்லாமல் இயங்கி வந்த 15 ஆட்டோக்கள் பறிமுதல்! காவல்துறை அதிரடி நடவடிக்கை!!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி, கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள் தலைமையில் கடலூர் நகரத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இயங்கி வந்த 15 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, online ல் அபராத தொகை செலுத்திய பின்பு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தக்க அறிவுரையும், சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக