அரக்கோணம்:தொகுதி நிதி ரூ. 10 லட்சத்தில் சிமெண்ட் சாலை கீழ்குப்பத்தில் சு.ரவி MLA திறந்து வைத்தார்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், கீழ்க்குப்பம் கிராமத்தில் புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது கீழ்குப்பம் மேட்டு தெருவில் சட்ட மன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 10 லட்சம்
செலவில் 170 மீட்டர் நீளமுள்ள சிமெண்ட் சாலை போடப்பட்டது இதன் திறப்பு விழாவிற்கு ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர். சத்யா தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக எதிர்கட்சி துணைக் கொராடாவும், சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி MLA கலந்து கொண்டு சிமெண்ட் சாலையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர். பிரகாஷ், வார்டு உறுப்பினர் ஜான்விக்டர்,
நிர்வாகிகள் கருணா பிரபாகரன், மோகன், ராமச்சந்திரன், ரேவதி,உள்ளிட்ட திரளான பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர். சி. ஜே. ராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார் 40 வருட மக்கள்கனவு சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி நிறைவேற்றி தந்தார் என மக்களிடையே பாராட்டி பேசபட்டது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக