பண்ருட்டி நகரத்திற்கு மின்விளக்கு திட்டம்! நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர். விஷ்ணு பிரசாத் MP!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரத்துக்கு மின்விளக்கு திட்டம் துவக்கி வைப்பதற்கு கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். விஷ்ணு பிரசாத் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர். ஷேக் நூர்தின் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை துணை அமைப்பாளர். புரட்சி பாபு ஆயர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் சென்னை சாலை மேம்பாலம் கீழ்பகுதியில் சிறு சுரங்கப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் நினைவுட்டும் விதமாக கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டது. அதைபெற்றுக்கொண்டு அதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக