செய்யூர் தற்காலிக கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் துணை கொறடா சு.ரவிMLA கோரிக்கை!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்,செய்யூர் தற்காலிக கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையில் கூறியதாவது
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வணக்கம் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி செய்யூர் ஊராட்சியில் அரசு தற்காலிக கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது ஆனால் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொள்முதல் நிலையம் மூடப்பட்டுவிட்டது ஆனால் செய்யூர் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்து விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை 45 குவியலாக 15000 சிப்பம் கொண்ட நெல்லை களத்தில் கொட்டி வைத்துள்ளார்கள் தினந்தோறும் பெய்து வரும் மழையில் நெல்மணிகள் நனைந்து விவசாயிகளுக்குபெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது அது மட்டுமல்லாமல் தினந்தோறும் விவசாயிகள் அவர்களுடைய நெல்லை பாதுகாக்க களத்திலே இரவு பகல் பாராமல் படுத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசு நெல்லை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளார்கள் மறு சாகுபடி செய்ய முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மூடியுள்ள அரசு தற்காலிக கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து திறந்தவெளியில் கொட்டி வைத்துள்ள சுமார் 15,000 சிற்பங்களை அரசு கொள்முதல் செய்ய உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சு. ரவி எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக