ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் கடலூரில் நடைபெற்ற காவலர் தினம்!!

கடலூர் மாவட்டம்,1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர். 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி 

செப்டம்பர் 6  கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுத்தூணில் வீரமரணம் அடைந்த காவலர்களை போற்றும் விதமாக  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் இந்திய அரசியலமைப்பின் பாலும், 

தமிழ்நாடு காவல்துறையின், உயரிய நோக்கங்களின் பாலும், நான் உண்மையான ஈடுபாடும் உளமார்ந்த பற்றும் கொண்டிருப்பேன் என்று மனமாற உறுதி கூறுகிறேன். எந்தவித அச்சமோ விருப்பு வெறுப்போ இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கிறேன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்களின் தலைமையில் காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர் . 

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்.N. கோடீஸ்வரன்,V. ரகுபதி , ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர். P. அப்பாண்டைராஜ் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் தினம் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!