பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கற்றல் கொண்டாட்டம்!!


கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். சிபி. ஆதித்ய செந்தில்குமார் IAS அவர்களின் அறிவுறுத்துதல்  படியும், கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். ஆ. எல்லப்பன் அவர்களின் ஆலோசனை படியும் கடலூர் மாவட்டத்தில் கற்றல் கொண்டாட்டம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பண்ருட்டி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கற்றல் கொண்டாட்டம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


கற்றல் கொண்டாட்டம் நிகழ்வில் மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிப்பு பயிற்சி,ஓவியம் பயிற்சி, செஸ் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற பயிற்சியில் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர். ராஜா ஆ,பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர். ஏ. வீ. லோகநாதன்,

ஆசிரியர் பயிற்றுநர். இளஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு வழங்கினர்.மேலும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்த கற்றல் கொண்டாட்டம் நிகழ்வில்  மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!