பனப்பாக்கம் அருகே தென்மாம்பாக்கம் கிராமத்தில்'டாஸ்மாக் கடை வரக்கூடாது' என பொதுமக்கள் சாலை மறியல்!



ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் திருமால்பூர் ரோட்டில் புதியதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த ரோட்டின் இருபுறங்களிலும் வயல்வெளிகள் உள்ளதால் சுற்றுப்புற சூழல் மாசுபாடு ஏற்படும் என கூறி இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வருவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் பனப்பாக்கம் திருமால்பூர் ரோட்டில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை வரக்கூடாது என கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த நெமிலி இன்ஸ்பெக்டர். நாகேந்திரன், சப் இன்ஸ்பெக்டர். நாராயணசாமி, தாசில்தார். ராஜலட்சுமி, வருவாய் ஆய்வாளர். வெங்கடேசன் உள்ளிட்டோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!