விருத்தாச்சலம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி விருத்தாசலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உத்தரவுபடி போக்குவரத்து உதவி ஆய்வாளர். செல்வநாயகம் மற்றும் தலைமை காவலர்கள் விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு விதிகளை எடுத்து கூறி சாலையை கடக்கும் போது சிக்னல் பார்த்து கடக்கவும், இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணியவும், 18 வயது நிரம்பிய உடன் ஓட்டுனர் உரிமம் பெற்று வாகனம் ஓட்டவும், இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தவும் மிதமான வேகத்தில் வாகனத்தை ஓட்ட அறிவுறுத்தி விழிப்புணர்வு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக