கடலூர்: புதிய அரசு போக்குவரத்து கழக பேருந்து வசதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர். சி. வி. கணேசன்!!

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி, சிறுபாக்கம் முதல் மங்களூர், திட்டக்குடி, வயலப்பாடி, புதுவேட்டக்குடி, துங்கபுரம், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர்  வரை செல்லும் புதிய அரசு போக்குவரத்து கழக பேருந்து வசதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். C V கணேசன்  அவர்களுடன் சிறுபாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து துவக்கிவைத்து மலையனூர், மங்களூர், பொடையூர், ஆவட்டி x ரோடு வரை பேருந்தில் பயணம் மேற்கொண்டோம். அக்கிராம பொதுமக்களின் பேருந்து சேவையினை வரவேற்று மகிழ்ந்தார்கள்.

உடன் விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர். குணசேகரன், அரசு அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!