மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணச் சலுகை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நலசங்க மாநாட்டில் தீர்மானம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் வட்டக்கிளை 2வது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு அரக்கோணம் வட்ட கிளை தலைவர். ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார் வட்ட துணைத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் முனைவர். கலைநேசன் மாநாடு ஒருங்கிணைத்தார் கிளைச் செயலாளர். செல்வநாதன் வரவேற்றார். மாவட்டத் தலைவர். சண்முகம் மாவட்ட செயலாளர். அப்துல் ரஹீம் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் மாநாடு துவக்க உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர். பாண்டுரங்கன் மாவட்ட இணை செயலாளர். மதியழகன் சங்க செயல்பாடு குறித்து பேசினர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர். பிரின்ஸ் தேவ ஆசீர்வாதம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். வேலவன் வாழ்த்தி பேசினர் பொருளாளர். சற்குணம் நன்றி கூறினார்
80 வயது வயதில் கொடுப்பதாக அறிவித்த 20 சதவித ஊதிய உயர்வு 70 வயதில் 10 சதவிதமும் 80ல் 10 சதவிதமும் தேர்தல் வாக்குறுதி படி வழங்க வேண்டும் ஓய்வூதியர்களுக்கு காசில்லாத மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு மீண்டும் ரயில் பயண கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினார். வருகிற அக்டோபர் 11ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட மாநாடு வாலாஜாவிலும் ஜனவரி 24ஆம் தேதி மாநில மாநாடு கரூரிலும் நடைபெறும் என அறிவித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக