நெமிலி அருகே துறையூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், துறையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர். சிவகுமார் தலைமை தாங்கினார்.திமுக ஒன்றிய செயலாளர்கள். எஸ். ஜி .சி. பெருமாள், ஆர். பி.ரவீந்திரன், மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள்,துறையூர் ஊராட்சி மன்ற தலைவர். குணசேகரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் துறையூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் நெமிலி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர். பிரகாஷ்,ஒன்றிய துணைச் செயலாளர். ரவி,மாவட்ட பிரதிநிதி. மணி மற்றும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!