அரக்கோணம் நகர சபை கூட்டம்!மார்க்கெட் வியாபாரிகள் சுமை குறைக்க வேண்டும் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் முறையீடு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர சபை சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர். லட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர். கலாவதி மற்றும் ஆணையாளர். ஆனந்த் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானம் வாசிக்க தொடங்கிய போது  அதிமுக உறுப்பினர். நரசிம்மன் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ஒரு லட்சம் வீதம் 17 லட்சம் ஒதுக்கீடு ஒதுக்கியிருப்பது அதிகபட்சமானது இது உங்கள் அரசு திட்டம்  இதற்காக மக்கள் வரிப்பணம் செலவழிப்பது அநியாயம் என்று வாதிட்டார். இதனிடையே கடந்த கூட்டத் தொடரில் ஒத்திவைக்கப்பட்ட மார்க்கெட் தீர்மானத்தின் மீது வியாபாரிகள் சுமை குறைக்க வேண்டும் என அதிமுக  உறுப்பினர். பாபு திமுக உறுப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியது.  அதிமுக உறுப்பினர் நரசிம்மன் பேசிய போது மார்க்கெட் விவகாரத்தில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் இதில் அதிமுக மற்றும் திமுகவினர் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் திமுக உறுப்பினர். துரை சீனிவாசன் பேசியபோது பழனிபேட்டை இரட்டை கண் பாலம்  கட்டிடப் பணி துவங்க ரயில்வே நிலையம் முடிவு எடுத்து இருப்பதாக தெரிய வருகிறது  இதனால் பாலம் அடைக்கப்படும் சூழ்நிலை உருவாகிவுள்ளது இதனால் 400 ஆயிரம் மக்கள் பாதிப்பிற்கு தள்ளப்படுவார்கள் ஆகவே ரயில்வே நிர்வாகத்துடன்  பேசி ஒரு வழி பாதை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்   நரசிம்மன் பேசிய போது ஒவ்வொரு கூட்டம் மூன்று மாத இடைவேளையில்  நடப்பதால் மக்கள் குறைகள் தீர்க்கப்படாமல் புறக்கணிக்கபடுகிறது  ஆகவே கூட்டத்தினை மாதம் மாதம் கூட்டம்  நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடுத்துரைத்தார். கூட்டம் முழுவதும் ஆண் உறுப்பினர்களின் கடும் விவாதத்தால் பெண் உறுப்பினர்கள் பேச வாய்ப்பு ஏற்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!