ஆற்காடு பாலாற்றில் மணல் கொள்ளை: பொலிரோ வாகனம் பறிமுதல்!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், புதுப்பாடி உள்வட்டம், புதுப்பாடி கிராமத்தில் உள்ள பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக ஆற்காடு வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 11.50 மணியளவில் வருவாய்த் துறையினர் பாலாற்றுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொலிரோ வாகனத்தில் மணலை கடத்தி வந்த கும்பலை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சோதனையில், புதுப்பாடி மற்றும் திமிரி வருவாய் ஆய்வாளர்கள், குக்குண்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!