சோளிங்கர் அருகே ஏரியில் மூழ்கி மூன்று குழந்தைகள் பலி!


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாலிக்கால் கிராமம் உள்ளது. ஆதிதிராவிட பகுதி சார்ந்த செல்வராஜ் மனைவி பெயர் நாகஜோதி இவர்களுக்கு பிரதீப் என்ற மூத்த மகன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இலவ அழகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். செல்வராஜின் இளைய மகன் இளவழகன் அதே தாலிக்கால் கிராமத்தைச் சார்ந்த விஜயகாந்த் மனைவி பெயர் மணிமேகலை இவர்களுக்கு அட்சயா வயது 8  பெண் பிள்ளை அமுதன் சுதன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளன விஜயகாந்தின் மகன்கள் அமுதன் சுதன் செல்வராஜ் மகன் இளவழகன் இவர்கள் மூவரும் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மிதி வண்டி எடுத்துக்கொண்டு விளையாடச் சென்றுள்ளனர்‌. அப்பொழுது தாலிக்கால் கிராமத்தின் அருகே ஏறி இருப்பதினால் அங்கு குளிக்கச் சென்றுள்ளனர். இதில் மூவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் நீரில் விளையாடும் பொழுது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு நீரில் மூழ்கியுள்ளனர். அந்த வழியே வந்த ஒரு நபர் ஏரிக்கரையின் மேல் சைக்கிள் உள்ளது. மூன்று குழந்தைகள்  உடைகள் உள்ளதை பார்த்த நபர் உடனடியாக ஏரிக்கரையின் மேல் ஏறி சென்றுள்ளார். அங்கு எந்த சத்தமும் இல்லை குழந்தைகள் இல்லை ஆனால் மூன்று குழந்தைகள் உடைகள் மற்றும் சைக்கிள் உள்ளதை கண்ட நபர் உடனடியாக கிராமத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த குழந்தைகள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேட ஆரம்பித்துள்ளனர். அப்பொழுது விஜயகாந்த் மணிமேகலை குழந்தைகள் ஆன அமுதன் 9 சுதன் 7 இருவரும் காணவில்லை என்பது தெரியவந்தது ஆதி திராவிட பகுதியைச் சார்ந்த செல்வராஜ் மகன் இளவழகன் 6 காணவில்லை என்பது தெரியவந்தது உடனடியாக சோளிங்கர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்து ஏரியில் கரையின் மேல் உள்ள சைக்கிள் உடைகளை வைத்து இவர்கள் மூவரும் என அடையாளம் காணப்பட்டு தீயணைப்பு படையினர் ஏரியின் குழந்தைகளை தேட ஆரம்பித்தனர். ஏரியில் விநாயகர் சிலை கரைப்பிற்காக போடப்பட்ட சிலையின் அடியில் இரண்டு குழந்தைகள் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்ததைக் கண்ட தீயணைப்பு படை வீரர்கள் இரண்டு ஊடல்களை மீட்டு கரையில் சேர்த்தனர் மேலும் தேடுதல் வேட்டையில் இன்னொரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த மூன்று குழந்தைகள் தாலிக்கால் கிராமத்தைச் சார்ந்த மூன்று குழந்தைகளை தெரிய வந்ததும் மூன்று உடகளை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைகள் விவரங்கள் பதிவு செய்து பின் வேறு வேறு சமூகத்தை சார்ந்த குழந்தைகள் என்பதால்பரிசோதனைகாக மூன்று உடல்கலை வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற வருடம் இதே ஏரியில் இரண்டு குழந்தைகள் நீரில் மூழுகி உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!