வளவனூர்:சொரப்பூர் கிராமத்தில் நடைபெற்ற கன்னக்களவு திருட்டில் ஒருவர் கைது!!

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ப.சரவணன், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். சரவணன் அவர்கள் மேற்பார்வையில்வளவனூர் காவல் ஆய்வாளர்.அருள் செல்வம், உதவி ஆய்வாளர். கௌதமன், தலைமை காவலர். பிரதீப் குமார் மற்றும் காவலர்கள் தலைமையில்   

சொரப்பூர் கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து எதிரியின் புகைப்படங்கள் அடையாள காணப்பட்டு எதிரியை தேடி வந்த நிலையில்

சிறுவந்தாடு பேருந்து நிறுத்தம் அருகே  வாகனத் தணிக்கையில் இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை காவல் நிலையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு கிராமம், குபேரபட்டினத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் விக்ரம் என தெரிய வந்தது.

மேலும் கடந்த 07.04.2025 ஆம் தேதி அன்று சொரப்பூர் கிராமம் மெயின் ரோடு தெருவில் வசிக்கும் ராதா என்பவருக்கு சொந்தமான வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டில் உள்ள பீரோவில் இருந்த நகை, அவரது மனைவி அணிந்திருந்த செயின், மற்றும்  வெள்ளி பொருட்கள் கொள்ளை அடித்த குற்றத்தில் தொடர்புடைய நபர் என்பது தெரியவந்தது.

எனவே எதிரியை கைது செய்து எதிரியிடமிருந்த பணம் ரூபாய் 10 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!