ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டு இடத்தை மீட்டு தர கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராம பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு வழங்கப்பட்டு பல தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர். ஒத்துழைப்போடு மாற்று சமூகத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் சுடுகாடு இடத்தினை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் தற்போது கிராம மக்கள் இறுதிச் சடங்கிற்கு சுடுகாடை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் என பலரிடம் சுடுகாடு பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் குறித்தும் ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆக்கிரமிப்பு செய்த நபர் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திமிரி ஒன்றிய மகளிரணி செயலாளர். மாலதி தலைமையில் கிராம மக்கள் காவனூர், வேலூர் செல்லும் சாலையை மரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சுடுகாட்டிற்கான இடத்தை அளந்து வழங்கப்படும் என தெரிவித்திருக்கும் நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!