கன்னியாகுமரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்! வேல்முருகன் எம். எல். ஏ பங்கேற்பு!!

அரசு  உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசினர் உறுதிமொழிகள் தொடர்புடைய பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு முடித்த பின்னர்  மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற  ஆய்வுக் கூட்டத்தில்  மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த உறுதிமொழிகள் குறித்தும் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

கூட்டத்தில்குழுஉறுப்பினர்களான.மோகன்.சமஉ அவர்களும், அருள்.சமஉ அவர்களும், RR .சீனிவாசன்.சமஉ அவர்களும், மாங்குடி.சமஉ அவர்களும் பேரவை துணைச் செயலாளர், சார்புச் செயலாளர், மற்றும் பிரிவு அலுவலர்களும்

மாவட்ட ஆட்சித் தலைவர். அழகு மீனா. IAS அவர்களும்மாவட்ட வருவாய் அலுவலர். ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.நிஷாந்த் கிருஷ்ணா. இ.ஆ.ப., பத்மநாபபுரம் சார் ஆட்சியர். வினயக்குமார் மீனா, இ.ஆ.ப., நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர். செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர். புஷ்பா தேவி,நெடுஞ்சாலை துறை கோட்ட செயற்பொறியாளர். சத்தியமூர்த்தி, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர். மரு.லியோ டேவிட், கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர். கிளாரான்ஸ் டேவி, இணை இயக்குநர். சுகாதாரப் பணிகள் மரு.சகாயஸ்டீபன் ராஜ், துணை இயக்குனர்கள். மரு.ரவிக்குமார் (குடும்ப நலப்பணிகள்), சின்ன குப்பன் (மீன்வளத்துறை), மாவட்ட பொது சுகாதார மருத்துவ அலுவலர்.அரவிந்த் ஜோதி, மாவட்ட சுற்றுலா அலுவலர்.காமராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர். பாரதி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர். குமரி ஸ்டீபன், வட்டாட்சியர். கந்தசாமி (அகஸ்தீஸ்வரம்), தனி வட்டாட்சியர். (தேசிய நெடுஞ்சாலை) ராஜேஷ், உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!