கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல் குறித்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்!!
கடலூர்மாவட்டம்,இன்று 16.9.2025 கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், கடலூர் மாவட்ட காவல்துறை, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வு காணுதல் குறித்த பல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்வில்மைத்திரிதிட்டஒருங்கிணைப்பாளர். S. ஆர்த்தி எப்சிபா, நிர்வாக அறங்காவலர். P. சீனுபெருமாள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் . E. சித்ரா, கூடுதல் காவல்கண்காணிப்பாளர். V. ரகுபதி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி R. சுந்தர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக