வனச்சரக அதிகாரிகள் வழங்கும் இலவச மரக்கன்றுகள்!!
தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஒன்றியங்களில் விவசாயிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 22,500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விவசாயிகளுக்கு தேக்கு ,குமிழ்,மகாகனி செம்மரம் போன்றவைகளும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கு பாதாம் ,வேம்பு ,புங்கன் மகாகனி, நாவல், நீர்மருது போன்ற மரக்கன்றுகள் வழங்க இருப்பதாக ரேஞ்சர் சந்தியா கூறியுள்ளார். கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. வருசநாடு வனச்சாரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக