உலக இயன்முறை மருத்துவ தினம்! விழிப்புணர்வு பேரணி!!ஆர்.டி.ஓ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்!!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், நெமிலி, திருத்தணி பகுதி பிசியோதெரபி டாக்டர்கள் சங்கம் சார்பில் உலக இயன் முறை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணிதொடங்கி வைக்கப்பட்டது இதனை அரக்கோணம் கோட்டாட்சியர்  வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

உடல் வலி இல்லாத வாழ்வு நலமாய் மலர... இயன்முறை மருத்துவம் குறித்த மாபெரும் விழிப்புணர்வு பேரணிக்கு மருத்துவர் அமர்தீப் விஜயக்குமார் தலைமை வகித்தார். காருண்யா மல்டி ஸ்பெஷாலிட்டி பிசியோ கேர் மருத்துவர். சர்ச்சில் முன்னிலை வகித்தார்.

விழா ஏற்பாடுகளில் மருத்துவர்கள் டாக்டர்.டி.பியூலா சர்ச்சில், சுதாகர், சுரேஷ்பாபு மற்றும் உஷா ஈடுபட்டனர். பேரணியில் ஹயாகிரீவர் வித்யாஷாம் பள்ளி மற்றும் டாக்டர். விஜி என் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அரக்கோணம் காவல் நிலையம் எதிரில் புறப்பட்ட பேரணி பழைய பேருந்து நிலையம் சுவால்பேட்டை தாலுகா ஆபிஸ் வழியாக இந்திரா காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. பின்னர் விக்னேஷ் மஹாலில் பரிசளிப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர். ஜாபர் சித்தி கலந்து கொண்டார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!