பழமை வாய்ந்த கோயிலில் அலைமோதிய பக்தர் கூட்டம்!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, பெரியகுளம் செல்லும் சாலையில் வைகை அணை அருகில் அருள்மிகு ஸ்ரீ கதலிநரசிங்க பெருமாள்  மற்றும் அருள்மிகு ஸ்ரீ செங்கமல  தாயார் அருள்பாலிக்கும் பழமை வாய்ந்த கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் பக்தர்களின் வருகை அலைமோதியது. ஏராளமானோர் அன்னதானம் வழங்கினர் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம் மேலும் சனி பகவான் புரட்டாசி மாதத்தில் தான் அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் பாவங்கள் விலகி பெருமாளின் அருள்பூரணமாக கிடைக்கும். திருமண தடைகள் விலகும். மேலும் நவராத்திரி நாயகிகளின் அருளும் கிடைக்கும். .செல்வம் செழிக்கும். விஸ்ணு சகஸ்ர நாமம் தினமும் கேட்டு வந்தால் குழந்தைகள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவார்கள். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இத்தனை பலன் கிடைக்கும். அருகிலுள்ள சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் பக்தர் கூட்டம் அலை மோதியது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!