அரக்கோணம் ரயில்வே இரட்டை கண் பாலம் அகலப்படுத்தி உயர்த்தி தர வேண்டும் சு.ரவி எம்.எல்.ஏ வலியுறுத்தி பேச்சு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிபேட்டையில் ரயில்வே இரட்டை கண் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மீது கூடுதல் ரயில்வே சாலை அமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இதனால் போக்குவரத்து தடை ஏற்படும் சுழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்.சு. ரவி பாலத்தின் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது இந்த இரட்டை கண் பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது மிகவும் குறுக்கலான குட்டையான பாலத்தால் மக்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டனர். எனவே முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில்  மேம்பாலம் அமைக்க என்பது கோடி ஒதுக்கப்பட்டது. அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி முயற்சி எடுக்காமல்  கிடப்பில் போட்டது எனவே  மேம்பாலம் அமைக்காக விட்டாலும் சரி பலமாக அகலப்படுத்தி உயரம் கொண்ட அளவில் அமைத்துத் தர வேண்டும் மேலும் தற்போது நடந்து வரும் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் இதில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தொடர் போராட்டம் அதிமுக சார்பில் நடைபெறும் என தெரிவித்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!