நெமிலி அருகே புதிய மேம்பாலங்கள் அமைச்சர் எ.வ வேலு திறந்து வைப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. அதேபோல், அரக்கோணம்-நெமிலி நெடுஞ்சாலையில் உள்ள கல்லாற்றில் தரைப்பாலத்திற்கு மாற்றாக ரூ.//கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், பன்னியூர்-பனப்பாக்கம் சாலையில் காவேரிப்பாக்கம் ஏரி மதகில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாயின் குறுக்கே ரூ.6 கோடி மதிப் பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தம் ரூ.54 கோடி மதிப்பில் புதி தாக கட்டப்பட்டுள்ள 3 உயர்மட்ட மேம்பாலங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்க்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்பி ஜெகதரட்சகன் எம்.எல்.ஏக்கள் முனிரத்தினம், ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா IAS வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலந்து கொண்டு நெமிலி அருகே கல்லாற்றில் ரூ.11 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். உடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, கலெக்டர் சந்திரகலா, எம்பி ஜெகத்ரட்சன், எம்எல்ஏ முனிரத்தினம் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சுலந்து கொண்டு புதிய உயர்மட்ட மேம்பாலங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:


தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டு வருகி றது. ஒவ்வொரு பாலம் கட்டும்போதும் அதற் கான நிதியை முதல்வர் ஒதுக்குகிறார் உடனடி யாக பாலங்களை கட்டி முடிக்கவேண்டும், காலம் தாழ்த்தக்கூடாது என கண்டிப்போடு சொல்கிறார். அதன்படி, ஒவ்வொரு பாலமும் 15 மாதத்திற்குள் கட்டி முடிக்க இட்டமிடப் படுகிறது.

ஆனால், 12 மாதத்திற்குள்ளாகவே பாலங்கள் கட்டி முடிக்கப்படுகிறது. திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின்பு 18 புதிய பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் 14 பாலங்கள் கட்டி முடிக் கப்பட்டு திறக்கப்பட்டுள் னது அதேபோல், அரசு பொறுப்பேற்றபோது 1,281 தரைப்பாலங்கள் இருந் துள்ளது. இதனால், மழைக் காலங்களில் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை போக்கும் வகையில் அவற்றை உயர் மட்ட மேம்பாலமாக சுட்ட முதல்வர் முகஸ்டா ன் உத்தரவிட்டார். அதன்படி, தற்போது 1.197 உயர்மட்ட மேம்பாலங் கள் கட்டி முடிக்கப்பட்டு பயன் பாட்டிற்கு திறக சுப்பட்டுள்ளது. ராணிப் பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுவருகிறது. இதற்காக, முதல் கட்டமாக நிலங் களை கையகப்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக சாலை அமைக்கும் பணிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர். செல் வராஜ், தலைமை பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, செந்தில், ஒன்றியக்குழு தலைவர்கள் வடிவேலு, நிர்மலா சவுந்தர், ஒன்றியக் குழு துணைத்தலைவர் புருஷோத்தமன், பேரூராட்சி தலைவர்கள். ரேணுகா தேவி சரவணன், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், கவிதா சீனிவாசன், நரசிம்மன். ஒன்றிய திமுக செயலாளர்கள். சவுந்தர், பெருமாள், ரவீந்திரன், தமிழ்மணி, பாலாஜி. நெய் வசி கா மணி, பேரூராட்சி செயலாளர் ஜனார்த்தனன். வர்த்தக அணி அமைப் பாளர் ராகேஷ் ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் பங்கேற்க வருகை தந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஓச்சேரி பகுதியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி. திமுக பொதுக்குழு உறுப்பினர் சி.மாணிக்கம் கவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர்கள் எம்.பாலாஜி. தெய்வசிகாமணி, நகர செயலாளர். பாஸ்(எ)நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!