திங்க் கேஸ் நடத்திய மாவட்ட எரிவாயு குழாய் அமைப்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மாவட்ட எரிவாயு குழாய் அமைப்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு  கூட்டம் குறித்து திங்க் கேஸ் நிறுவனம் கூறியதாவது  இயற்கை எரிவாயு வினியோக செயல்பாட்டில் முன்னணி வகிக்கும் திங்க் கேஸ்  நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயற்கை எரிவாயு குழாய் அமைப்புகள் மீது விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஒருங்கிணைப்பு கூட்டத்தை . ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் நடத்தியது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர்  தனலிங்கம் மற்றும் திட்ட இயக்குனர்  சரண்யா தேவி தலைமை வகித்தனர். இம்மாவட்டத்தில் இயற்கை எரிவாயு வினியோகத்திற்காக நடைபெற்று வரும் குழாய் பதிப்பு பணிகள் குறித்து  விழிப்புணர்வை மேம்படுத்துவது இக்கூட்டத்தின் நோக்கமாகும். எரிவாயு வினியோகத்திற்காக அமைக்கப்படும் குழாய் அமைப்புகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் இக்கூட்டத்தில்  விவாதிக்கபட்டது. மேலும் இந் நிறுவனம் எடுத்து வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்  விளக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திங்க் கேஸ் நிறுவன அதிகாரிகளுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்  ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ராணிப் பேட்டை மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் குழாய் அமைப்பு பணிகள் குறித்த  தகவல்கள் மற்றும் அப்பணிகளில் எட்டப்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றியும் விளக்க பட்டன. மேலும், குழாய் அமைப்புகளுக்கு சேதம் நிகழாமல் தடுக்க நிறுவனத்தால் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் எடுத்து கூறபட்டது இயற்கை எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பாதைகளில்  தரையைத் தோண்டும் பணியை மேற்கொள்வதற்கு முன்பு இதற்கென நிறுவப்பட்டுள்ள ஒரு பிரத்யேக உதவி எண்ணை, அரசின் பல்வேறு துறைகளும் மற்றும் ஒப்பந்ததாரர்களும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்  என திட்டம் வலியுறுத்துகிறது. நிறுவப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய்களை பாதுகாக்கவும் மற்றும் அவற்றில் சேதம் ஏற்படாமல் தடுக்கவும் இத்திட்டம் திட்டம் உதவுகிறது; அத்துடன் இப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும் இது உறுதிசெய்யும். திங்க் கேஸ் அறிமுகம் செய்திருக்கும் இத்திட்டம் மாவட்ட அதிகாரிகளால் மனமார பாராட்டப்பட்டது. மேலும் நிறுவனத்தின் மண்டல தலைமை அதிகாரி  கௌதம் ஆனந்த் கூட்டத்தில் பேசுகையில், “இயற்கை எரிவாயு குழாய் அமைப்பின் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் உறுதிசெய்வதற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் ஒத்துழைப்போடு செயல்பட இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இயற்கை எரிவாயு குழாய் அமைப்புகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகளை கண்டிப்பாக பின்பற்றுவதிலும் மற்றும் அடித்தள அளவில் விழிப்புணர்வை வளர்ப்பதிலும் எங்களது வலுவான அர்ப்பணிப்பு இனியும் தொடரும்,” என்று கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!