விழுப்புரம்:வெள்ளிமேடு பேட்டை பகுதியில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில் ஐந்துக்கும் கிலோ கஞ்சா பறிமுதல் ஆறு பேர் கைது!!

விழுப்புரம் மாவட்டம்,அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய நபர்கள், போலீசாரின் துரித விசாரணையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல், 6 பேர் கைதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர். சரவணன் IPS., அவர்களிடம் உத்தரவின் பேரில் ரோஷனை காவல் நிலைய ஆய்வாளர்தரணேஷ்வரி,உதவிஆய்வாளர்.சடண்முகம், முரளி மற்றும் காவலர்கள் தலைமையில் வெள்ளிமேடு பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் எதிரிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்க எதிரிகளை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து , எதிரிகளை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் 

வந்தவாசி தாலுகா சு. காட்டேரி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கவியரசு வயது 23, அய்யனார் என்பவரின் மகன் வயது 19, சரத் பாபு என்பவரின் மகன் சதீஷ் வயது 20, விழுப்புரம் ஜி ஆர் பி தெருவையை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் ரகுபதி வயது 19, வெளிமேடு பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகன் குபேந்திரன் வயது 19, திண்டிவனம் கீழ் மலையனூர் பகுதியை சேர்ந்த வில்சன் என்பவரின் மகன் டிராவிட் வயது 19,  ஆகிய ஆறு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஐந்து கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு செல்போன்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. துரிதமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!