நெமிலியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா! பெ. வடிவேலு பங்கேற்பு!!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளையொட்டி “தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்” என திமுகவினர் பொதுமக்களோடு சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நெமிலி பேரூர் திமுக சார்பில், முன்னாள் முதல்வர், பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான வடிவேலு தலைமையில், நெமிலி பேருந்து நிலையத்தில் ஊர்வலமாக வந்து அங்குள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதைத்தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அண்ணாவின் படத்துக்கு ஒன்றியக்குழு தலைவர்.பெ. வடிவேலு, பேரூர் செயலாளர். ஜனார்த்தனன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, ஒன்றிய துணைச் செயலாளர். முகமது அப்துல் ரகுமான், நகர வர்த்தக அணி அமைப்பாளர். ராகேஷ் ஜெயின், ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு, “தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்” என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது, ஓரணியில் தமிழ்நாடு குடும்பத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிகமாக சேர்ந்துள்ளனர். என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன், நெமிலி பேரூராட்சி மன்றத்தலைவர். ரேணுகாதேவி சரவணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், இலக்கிய அணி வடகண்டியை பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!