ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பண்ணிருத் திருமுறை இசை கச்சேரி!!

ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம்.நேருஜி நகர், 7-வது தெருவில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆன்மீக ஆலயத்தில் சிவபெருமானுக்கான பண்ணிருத்திருமுறை இசை கச்சேரி 14.09.2025 இன்று காலை 8.00 மணி முதல் 12.30 மணி வரையில் நடைபெற்றது. சைவ தமிழ் திருமுறை திருக்கோவில் (பன்னிரு திருமுறை சிவனார்) சிவ.யுவராஜ் சமய சொற்பொழிவாளர் அவர்களால்  பன்னிரு திருமுறை இசை கச்சேரியுடன்

திருவிளக்கு பூசை, கணபதி பூசை, அம்மையப்பர் பூசை, செல்வங்களையும் அள்ளித்தரும் சோடச பூசை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக பிரமுகர் டி.அன்பு மற்றும் 5வது வார்டு நகர் மன்ற உறுப்பினர். சாமுண்டீஸ்வரி உட்பட வார்டு பொதுமக்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். ஆன்மீக வடிவேலு குடும்பத்தார் விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!