ராணிப்பேட்டையில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது!!

ராணிப்பேட்டை மாவட்டம் , ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லவும், விபத்துகளை தவிர்க்கவும், பொது மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இதனை கூடுதல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழகத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் மாவட்டங்களில் இரண்டாவது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளது என காவல் அலுவலர் கூறினார்.

இந்த ஊர்வலம் மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை, நவல்பூர், முத்துக்கடை ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும்  மருத்துவமனை வந்து அடைந்தது. இதில் தலைக்கவசம் உயிர்க்கவசம் சிக்னலை மதிப்போம் சிக்கலை தவிர்ப்போம் உள்ளிட்ட வாசகங்களை அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும் விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கியில் ஒலிக்க செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில்  மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மாணவ, மாணவிகள்  பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!