பொய்கை நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர். பெ. வடிவேலு!!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், பொய்கைநல்லூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர். சிவக்குமார் தலைமை தாங்கினார், வட்டாட்சியர். ராஜலட்சுமி, பொய்கை நல்லூர்  ஊராட்சி மன்ற தலைவர். சரளா மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் பொய்கைநல்லூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர். சுந்தரம்பாள் பெருமாள், நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர்.ஆர்.பி. இரவீந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!