பண்ருட்டி அருகே பெரிய நரிமேடு கிராமத்தில் புதிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்!சமரச முயற்சியில் காவல்துறை!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அருகே பெரிய நரிமேடு கிராமத்தில் புதிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை, பழைய கோவில் கருவறை சிலையை புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில் வைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு, புதிய கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு, போலீசார் பேச்சுவார்த்தை.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள பெரிய நரிமேடு கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் முருகன் சுவாமிகள் அடங்கிய ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான கோவில் என்பதால் இதற்கு பதிலாக ஊரார் ஒப்புதல் உடன் அதே பகுதியில் புதிய கோவில் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டுமான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுந்தரம் (45) தரப்பினர் புதிய கோவில் கட்டுவது சம்பந்தமாக பணிகள் நடத்தி வரும் நிலையில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த செந்தில் (47) தரப்பு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கோவில் கருவறை சிலைக்கு பூஜை செய்யப்பட்டு அருகில் உள்ள இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் செந்தில் தரப்பினர் சிலையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நடுவீரப்பட்டு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து

அருகில் உள்ள இடத்தில் தண்ணீர் தொட்டியில் சாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கோவிலில் கருவறை சிலையை அமைத்து கும்பாபிஷேக பணிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஏராளமான தற்போது புதிய கோவில் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நரிமேடு கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!