தரமான குடிநீர் வழங்க கோரி தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்!தண்ணீர் பானைகளை உடைத்து கோஷமிட்டதால் பரபரப்பு!!

புதுச்சேரி, செப் 9

உருளையன்பேட்டை கோவிந்தசாலைப்பகுதியில் மாசு கலந்த குடிநீர் குடித்த மூன்று பேர் பலியாகியுள்ளனர் மேலும்  நெல்லிதோப்பு, உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடடையே  சுத்தமான குடிநீர் வழங்க கோரி  உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு  தொகுதி மக்களை திரட்டி  பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து தரையில் அமர்ந்து முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர்.  லட்சுமி நாராயணன் ஆகியோரை கண்டித்தும், ராஜினாமா செய்யக்கோரியும்கோஷமிட்டனர். அப்போது திடீரென,  தரமான குடிநீர் வழங்கக்கோரி  தண்ணீர் பானைகளை உடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி திமுக அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான சிவா பேசுகையில், புதுச்சேரியில் ஒரு இடத்தில் மட்டும் குடிநீர்  பிரச்னை இல்லை, எல்லா தொகுகளிலும் இதே பிரச்னை உள்ளது.ஆனால் அரசு இறுக்கமாக கண்ணை மூடிக்கொண்டு உள்ளது என தெரிவித்தார். 

புதுச்சேரி செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!