கீழ்வெங்கடாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் ! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர். பெ. வடிவேலு!!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், கீழ்வெங்கடாபுரம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர். சிவக்குமார் தலைமை தாங்கினார், கீழ்வெங்கடாபுரம்  ஊராட்சி மன்ற தலைவர். அம்மு தட்சணாமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர். விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் கீழ்வெங்கடாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!