கரூரில் நடைபெற உள்ள திமுக கழக முப்பெரும் விழா!!

கரூர்மாவட்டம்,ஒவ்வொரு திமுக தொண்டனின் உணர்வு பெருவிழாவான "கழக முப்பெரும் விழா" வரும் 17ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிப்பட்டியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 

இதை முன்னிட்டு கோடாங்கிப்பட்டியில், நடைபெற்று வரும் விழா முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர். கே. என். நேரு அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, மேடை அலங்காரப் பணிகளை பார்வையிட்டதோடு, வாகன நிறுத்துமிடம்,  குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி அவர்கள், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர். சிவகாமசுந்தரி அவர்கள், ஆகியோருடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!