பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் ஊராட்சியில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார்.


இராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று போட்டியில் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர்.ஆர்.பி. ரவீந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், மாவட்ட கவுன்சிலர். சுந்தரம்பாள் பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.வி.எஸ். முரளி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். குலோத்துங்கன், ஒன்றிய அவைத் தலைவர். பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி பார்த்திபன், முன்னாள் கவுன்சிலர். பிரகாஷ், ஒன்றிய துணைச் செயலாளர். முகமது அப்துல் ரகுமான், நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட கபடி கழக துணை செயலாளர். ஹரிசங்கர்,         ஆதிராஜ் மற்றும் நிர்வாகிகள். விஜயன், சத்தியசீலன், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!