கடலூர்: டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு!!

கடலூர் மாவட்டம்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், காவிரி டெல்டா பாசனத்திற்காக அணைக்கரை கீழணையிலிருந்து கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்களுக்கு சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். மேலும், வீராணம் ஏரியில் தேக்கி வைக்கப்பட்ட நீரை அதன் பாசனப் பரப்பான 44,856 ஏக்கர் நிலங்களுக்கும், சென்னை மாநகர குடிநீருக்காகவும் நாள் ஒன்றுக்கு 73 கன அடி வீதம் இன்று திறந்து வைக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி. ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ சிந்தனைச் செல்லன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!