திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்,ஊஞ்சல் உற்சவம்!
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் லிங்கத் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் சாமி நாகாபரணம் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. மூலவர் அம்பாள் வெள்ளி அங்கி அலங்காரத்திலும் உற்சவர்அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில்ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
முன்னதாக மாட வீதியை 16 முறை வளம் வரும் கிரிவலம் நிகழ்ச்சி தொடங்கி நடந்தது. வீரட்டானேஸ்வரர் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி, கிரிவல பாதையில்உள்ள அஷ்ட லிங்கம் மற்றும்ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிஷ்டானம்,ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் வரும் பக்தர் களுக்கு குடிநீர், மருத்துவம், சுகாதார வசதிகள் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர் .
அப்பர் இல்ல அறக்கட்டளை சார்பில் தேவார இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம்ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர், உற்சவதாரர்கள், அப்பர் இல்ல அறக்கட்டளை நிர்வாகிகள், பவுர்ணமி விழாக்குழுவினர். சிவனடியார்கள். சிவத்தொண்டர்கள், கிராம பொதுமக்கள் செய்தனர். இரவு 7 மணிக்கு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை மூடப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக